search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலும் ஒரு வேத பாடசாலை மாணவர் உடல் மீட்பு
    X

    மேலும் ஒரு வேத பாடசாலை மாணவர் உடல் மீட்பு

    • திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியானவர்
    • மற்றொருவரின் உடலை தேடும் பணி தொடர்கிறது

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் பட்டர் குலம் என்ற பெயரில் வேதப ாடசாலை இயங்கி வருகிறது. இதனை ஆடிட்டர் பத்ரிநாராயணன் என்பவர்நி ர்வகித்து வருகிறார்.இங்கு 50-க்கும் மேற்பட்டோர் வேதம் பயின்றனர். நேற்று முன்தினத்துடன் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நிறைவடைந்தன. இதையடுத்து பெரும்பா–லான பெற்றோர் ஸ்ரீரங்கம் வந்து தங்களது மகன்களை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.அவர்கள் தவிர திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஹரி பிரசாத் (13), ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (12) மற்றும் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அபிராம் (13) ஆகிய 4 பேர் மட்டும் தங்கியிருந்தனர்.அவர்கள் இன்று (திங் கட்கிழமை) ஊருக்கு செல்ல முடிவெடுத்து இருந்தனர். இதற்கிடையே நேற்று காலை 6 மணியளவில் யாத்ரி நிவாஸ் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக வேத பாடசாலையில் அனுமதி பெற்று 4 பேரும் சென்றனர்.

    சுமார் 30 அடி ஆளம் வரை உள்ள அந்த பகு–திக்கு சென்றபோது 4 பேரும் திடீரென்று தண்ணீரில் மூழ்கினர். இதில் கோபாலகிருஷ்ணன் மட் டும் ஒருவழியாக தப்பி கரையேறினார். மற்ற 3 பேரையும் காப்பாற்றுமாறு கூச்சல் போட்டார்.

    ஆனால் அங்கு யாரும் இல்லாததால் ஓடிச்சென்று வேதபாடசாலையில் தெரிவித்தார். அதன்பேரில் பாடசாலை நிர்வாகிகள் உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    ஆனால் அதற்குள் தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் போனது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 25 பேர் ஆற்றுக்குள் இறங்கியும், பைபர் படகு–கள் மூலம் அந்த பகுதி முழுவதும் தேடினர். அப் போது விஷ்ணு பிரசாத் என்ற மாணவர் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற 2 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை வரை தேடியும் பலனின்றி போனது.அதே சமயம் இரவு நேரம் வந்ததால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 2-வது நாளாக ஆற்றில் மூழ்கி மாயமான 2 மாணவர்களை தேடும் பணிகள் தொடங்கின.மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி 30 மணி நேரத்தை கடந்து–விட்டதால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.இருப்பினும் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ெதாடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர் தேடுதல் பணியில் ஹரிபிரசாத் என்பவரது உடல் இன்று மதியம் மீட்கப் பட்டுள்ளது.கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் நாணல் புற்கள் வளர்ந்துள்ளதால் அதற்கிடையே மேலும் ஒரு மாணவரின் உடல்கள் சிக்கியிருக்க–லாம் என்ற சந்தேகத்தின் அடிப்படை–யில் தீயணைப்பு வீரர் கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இந்த சம்ப–வம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், சோகத் தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×