search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் விழா
    X

    தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் விழா

    • தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் விழா நடைபெற்றது
    • விழாவில் பெண்கள் கும்மி அடித்தும் குலவை போட்டும் அம்மாயியை வழிபட்டனர்

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் விழா நடைபெற்றது. ஊர் செழிக்கவும், விவசாயம் வளம் பெறவும், காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் வரவேண்டியும் நடைபெற்ற இந்த விழாவில், 3 சிறுமிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு, அம்மாயி சாமி அழைக்கப்பட்டது. பின்னர் அபிஷேக ஆராதனைநடைபெற்றது. விழாவில் பெண்கள் கும்மி அடித்தும் குலவை போட்டும் அம்மாயியை வழிபட்டனர். அதன் பின்னர் தங்களின் வீடுகளில் இருந்து ெகாண்டு வந்த முளைப்பாரியை காவிரி ஆற்றில் விட்டனர்.

    இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை வரதராஜபுரம் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் உபயதாரர்கள் செய்திருந்தனர்.அதே போல தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் பழனி சுப்பிரமணியசுவாமி கோயில் முன்பு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கும்மியடித்து வழிபட்டு மகிழ்ந்தனர். அதன் பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபாசண்முகம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.


    Next Story
    ×