search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பாறை அருகே மஞ்சம்படியில் கோலாகலம்-ஜல்லிக்கட்டு காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்
    X

    மணப்பாறை அருகே மஞ்சம்படியில் கோலாகலம்-ஜல்லிக்கட்டு காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்

    • ஜல்லிக்கட்டு காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினர்
    • போட்டியில் 700 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

    மணப்பாறை:

    தை மாதம் பிறந்து விட்டாலே தமிழ்நாட்டில் உள்ள வாடிவாசல்கள் அனைத்தும் களை கட்ட தொடங்கிவிடும். அந்த அளவுக்கு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டிகள் பிரப–லம் அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதற்கு அடுத்த–படியாக திருச்சி மாவட்டம் உள்ளது. பெரியசூரியூரில் தொடங் கிய ஜல்லிக்கட்டின் தொடர்ச்சியாக மணப்பாறை பகுதியில் ஆவாரங் காடு, கருங்குளம், பொத்தமேட்டுப்பட்டி, என்.பூலாம்பட்டியில் களை– கட்டியது. இதில் ஆயிரக்கணக்கான பயிற்சி பெற்ற காளைகள் களமாடி பார்வையாளர்களை பெரி–தும் கவர்ந்தது. நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில், காளையர்களும் மாடுகளை அடக்கி மழையில் நனைந்தனர். அந்த வரிசையில் இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் உள்ள புனித வனத்து அந்தோனியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் 700 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதலில் வாடிவாசலில் இருந்து வழக்கப்படி செவ–லூர் சின்னாக் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப் பட்ட காளைகள் வாடிவாச–லில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது. அப்போது காளையர் களை காளைகள் விரட்டி அடிக்க விரட்டி அடித்த காளைகளை வீரர்கள் விடாமல் பிடிக்க என காளையா? காளையர்களா? வெற்றி யாருக்கு என்ற போட்டியில் களமே அதிர்ந்தது.ஜல்லிக்கட்டு காளைக–ளுடன் மல்லுக்கட்டிய வீரர்களின் ஆவேசத்தை ரசித்த பார்வையாளர்களின் ஆரவாரம். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்க–ளுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், – வெள்ளி நாணயங்கள், என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப் பட்டது. போட்டியில் காய–மடைந்த–வர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித் குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ராம–நாதன் தலைமையில் ஏரா–ளமான போலீசார் பாது–காப்பு பணியில் ஈடுபட்ட–னர்.


    Next Story
    ×