search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காய்ந்த நெற்கதிர்களை கையில் ஏந்தி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் மனு
    X

    காய்ந்த நெற்கதிர்களை கையில் ஏந்தி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் மனு

    • காய்ந்த நெற்கதிர்களை கையில் ஏந்தி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் மனு கொடுத்தனர்
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சக்திவேல் மற்றும் அப்பகுதி விவசாயிகள் காய்ந்த நெற்கதிர்களுடன் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா திரு நெகுல்குளம், தேவராயநேரி, அசூர், வாழவந்தான் கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக திரு நெகில் குளம், தேவராய நேரி ஆகிய இரண்டு கிராமங்களில் மட்டும் 600 ஏக்கருக்கு மேல் புகையான் மற்றும் குடிநோய் பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் ஒரு ஏக்கருக்கு 10 மூட்டை கூட நெல் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.அதேபோன்று திருவரும்பூர் வட்டாரத்தில் மட்டும் மொத்தம் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர் பகுதி என்பது டெல்டா மாவட்டத்தின் அரை கிலோமீட்டர் அருகில் உள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு கிடைக்கும் இழப்பீடுகள் , நன்மைகள் இங்குள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை எனவே திருவுறும்பூர் பகுதியை டெல்டா பகுதியில் இணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×