search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆற்றில் மூழ்கி இறந்த மாணவரின் பிணத்துடன் அலைந்த நண்பர்கள்
    X

    ஆற்றில் மூழ்கி இறந்த மாணவரின் பிணத்துடன் அலைந்த நண்பர்கள்

    • ளியஞ்சோலை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வாலிபர் பலி
    • 2 மாவட்ட எல்லை பிரச்சினையால் பரிதவிப்பு

    உப்பிலியபுரம்,

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத் துள்ள பாபுராஜபுரம் இஸ்லாமியர் தெருவைச் சேர்ந்தவர் சர்புதீன். இவ–ருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் மகன் மாலிக் (வயது 19) பெரம்பலூரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந் தார்.தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக நண்பர்கள் 7 பேருடன் நேற்று புளியஞ்சோலைக்கு சென்றார். பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித் துவிட்டு, நாட்டாமடு பகுதியில் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது யாரும் கவனிக்காத நேரத் தில் மாலிக் தண்ணீரில் மூழ் கினார்.அவரது நண்பர்கள் மாலிக்கை தேடியபோது, தண்ணீரில் மூழ்கியதை அறிந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆபத் தான நிலையிலிருந்த மாலிக்கை, மோட்டார் சைக் கிளில் உட்கார வைத்து, அருகிலுள்ள பி.மேட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உப்பிலியபுரம் அரசு சுகாதார, நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது மூச்சுத்திணறல் காரணமாக மாலிக் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.புளியஞ்சோலை நாட்டமடு வனப்பகுதி நாமக்கல் மாவட்டம் வாளவந்திநாடு காவல்நிலைய எல்லைக் குட்பட்டதால், வழக்கு சம்மந் தமாக மாலிக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட் டுள்ளது. சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். முன்னதாக நண்பர்கள் வேறு வழியின்றி பலியான மாணவர் மாலிக் உடலுடன் அங்கு சென்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.நாட்டாமடுவில் தொட–ரும் இதுபோன்ற மரணங்களில், எல்லை பிரச்சினை சம்மந்தமாக உடல்கள் அலைக்கழிக்கப்படுவதும், உயிரைப் பறிகொடுத்தோர், தேவையற்ற மன உளைச்சலுக்குள்ளாவதும் வாடிக் கையாகி வருகிறது. புளியஞ்சோலை, நாட்டாமடு பகுதியை உப்பிலியபுரம் காவல் நிலைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதும், மாற்று அமைப் பாக நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் இப்பகுதியில் புறக்காவல் நிலை–யம் அமைப்பதுமே, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டாமடு பகுதியில் தொடரும் துர்மரணங் களை தடுக்க, சுற்றுலா துறையினரும், வனத்துறையினரும் இணைந்து முன்னறிவிப்பு பலகைகள், மருத்துவ முதலுதவிகளை மேம்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.

    Next Story
    ×