search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சார்பு நீதிமன்ற திறப்பு விழா
    X

    சார்பு நீதிமன்ற திறப்பு விழா

    • உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா திறந்து வைத்தார்
    • இளம் வழக்கறிஞர்கள் திறமையாக பணியாற்றி நீதிபதிகளாக வரவேண்டும் என்று அறிவுறுத்தல்

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முசிறி நகரில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் புதிதாக சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றதுதிறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா தலைமை தாங்கி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிர்மல் குமார், ஸ்ரீமதி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எந்த மாநிலத்தில் அமைதி நிலவுகிறதோ, அந்த மாநிலத்தில் நீதித்துறை செம்மையாக செயல்படுகிறது என்று அர்த்தம்அந்த வகையில் தமிழகத்தில் வசிக்கும் அனைவரின் தனி உரிமைகளையும் பாதுகாப்பதில் நீதிமன்றம் அரிய சிறப்பான பங்களிப்பை தருகிறது என்று பேசினார்.விழாவில் பேசிய தலைமை நீதிபதி ராஜா, 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சப்கோர்ட்டை துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திருச்சி மாவட்டத்திலிருந்து இளம் வழக்கறிஞர்கள் திறமையாக பணியாற்றி நீதிபதி அந்தஸ்தை பெற வேண்டும். பொதுமக்கள் நீதிமன்றத்தின் உதவியை தேடி வரும்போது, வாதாடும் வழக்கிற்காக நியாயமான கட்டணங்களை பெற்று, சிறப்பான சேவையாற்ற வேண்டும் என்று பேசினார் .விழாவில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், திருச்சி போலீஸ் எஸ்.பி. சுஜித் குமார், முசிறி கோட்டாட்சியர் மாதவன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாஸ்கர், சங்கச் செயலாளர் சந்திரசேகரன், அரசு வழக்கறிஞர் சப்த ரிசி, இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், சங்க பொருளாளர் ரங்கராஜன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×