search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலையடிப்பட்டியில் ஜல்லிகட்டு
    X

    மலையடிப்பட்டியில் ஜல்லிகட்டு

    • திமிலை உயர்த்தி வந்த காளைகளை, மல்லுகட்டி அடக்கிய காளையர்கள்
    • கரைபுரண்டோடிய உற்சாகம்

    மணப்பாறை,

    மணப்பாறை அருகே மலையடிபட்டியில் நடைபெற்று வரும் ஜல்லி கட்டில் ஏராளமான காளை களும், காளைய ர்களும் களம் கண்டு வருகின்றனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அங்குள்ள ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர், ஜல்லிக்கட்டு கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.முதலில் கோவில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகள், மாடு பிடி வீரர்களுக்கு சாவல் விடுத்தது. சாவாலை ஏற்கும் வண்ணம், அப்பகுதி மண்ணின் காளையர்கள், சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க துணிந்தனர். இந்த வீரமிகு விளையாட்டை காண திருச்சி மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர். துள்ளி வந்த காளைகளை, துரிதமாக செயல்பட்டு அடக்கி வெற்றி பெற்ற காளையர்களையும், சிக்காமல் ஆட்டம் காட்டி சென்ற காளைகளையும் பார்வையாளர்கள் கைத்தட்டி, விசில் அடித்து பாராட்டியது விறுவிறுப்பை கூட்டியது.இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், – வெள்ளி நாணயங்கள், என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்க ப்பட்டது. போட்டி யில் காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவமுகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுஜித் குமார் மேற்பார்வையில், மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி. ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×