search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அருகே துவாக்குடியில் செல்லாண்டி அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு
    X

    திருச்சி அருகே துவாக்குடியில் செல்லாண்டி அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு

    • திருச்சி அருகே துவாக்குடியில் செல்லாண்டி அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது
    • நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த செயினை திருடி சென்று விட்டனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த துவாக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரி ரவிக்குமார் அந்திக்கால பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலையில் கோவில் நடை திறக்க வந்த போது முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் செயின் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த செயினை திருடி சென்று விட்டனர்.இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை திருவெறும்பூர் ஆய்வாளர் பானுமதி துவாக்குடி போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் கைரேகை எதுவும் புதிதாக பதிவாகவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகையை திருடி சென்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×