search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காவிரி பழைய இரும்பு பாலத்தை திறக்க கோரி மனு
    X

    காவிரி பழைய இரும்பு பாலத்தை திறக்க கோரி மனு

    • காவிரி பழைய இரும்பு பாலத்தை திறக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
    • பள்ளி மாணவர்களின் நலன் கருதி

    திருச்சி,

    திருச்சி திருவானைக்கோவில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் பத்மநாபன் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் காவேரி பாலத்தை கடந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அன்றாட பிழைப்புக்காக தினசரி கூலி வேலை செய்பவர்கள் இந்த காவிரி பாலத்தை கடக்க வேண்டி இருக்கின்றது. இதில் அதிகம் குடும்பத் தலைவிகளும் பெண்களும் இளைஞர்களும் தினசரி பணிக்கு செல்ல காவேரி பாலத்தை கட்டாயமாக கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் மூலம் காவிரி பாலத்தில் உள்ள தார் சாலைகளை அகற்றிவிட்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் ஓரமாக இரு சக்கர வாகனங்கள் கடந்து செல்வதற்கு வழி விடப்பட்டது. இப்போது பாலத்தை முழுமையாக மூடிவிட்டார்கள். இதனால் மாணவ மாணவிகள் கல்லணை ரோடு வழியாக ஓயாமாரி சுடுகாடு வழியாக அண்ணா சாலையை கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. எனவே மாம்பழச் சாலையில் இருந்து அண்ணா சாலைக்கு செல்வதற்கு பழைய காவிரி இரும்பு பாலத்தினை திறந்து இருசக்கர வாகனம் மட்டும் அனுமதித்தால் பள்ளி கல்வி தடைப்படாமல் இருக்கும். அது மட்டுமல்லாமல் பாலம் அடைக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது முழு ஆண்டு தேர்வு பொது தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் சூழ்நிலை உள்ளது.

    ஆகவே பழைய காவிரி இரும்பு பாலத்தை திறந்து அதில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×