search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  நாளை நம்பெருமாள் புறப்பாடு
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை நம்பெருமாள் புறப்பாடு

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெற உள்ளது
    • பக்தர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள்

    திருச்சி:

    108 வைணத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்ேவறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து நாட்களிலும் உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    அந்த வகையில், நாளை (24-ந்தேதி, திங்கட்கிழமை) தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு சந்தனு மண்டபம் சென்றடைகிறார்.

    தொடர்ந்து காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். அதனைத் தொடர்ந்து பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை அலங்காரம், அமுது செய்தலுக்கு பின்னர் மாலை 4.45 மணிக்கு ஜாலி (சாலி) அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.

    இரவு 8 மணிக்கு சந்தனு மண்டலத்தில் இருந்து புறப்படும் உற்சவர் நம்பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுக்கு மரியாதையாகி இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். காலை 6.45 மணி முதல் 8 மணி வரை விஸ்வரூப தரிசனம், பூஜா காலம் காலை 8 மணி முதல் 10 மணி வரை சேவை நேரம் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை பகல் 1.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆகும். இரவு 7 மணிக்கு மேல் ஆரியப்படாள் வாயிலில் அனுமதி இல்லை.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×