search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.ஐ.டி.யூ.சி. பெண் தொழிலாளர்கள் பேரணி
    X

    ஏ.ஐ.டி.யூ.சி. பெண் தொழிலாளர்கள் பேரணி

    • உய்யக்கொண்டான் திருமலை கொடாப்பு பகுதியில் நடந்தது.
    • கிராம நிர்வாக அலுவலர் மூலம் முதல்வரிடம் முறையீடு

    திருச்சி,

    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் கட்டுமான பெண் தொழிலாளர் அமைப்பு, திருச்சி மேற்கு பகுதி குழு சார்பாக கோரிக்கை பேரணி திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கொடாப்பு பகுதியில் நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் சுமதி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சுரேஷ் தொடக்க உரை நிகழ்த்தினார்.பின்னர் அவர்கள் வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு வீடு வழங்கவேண்டும், வீடு கட்ட ரூ. 4 லட்சம் வழங்கும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும், வாரிய நோக்கத்தில் ஒன்றான இ.எஸ்.ஐ., பி.எப். ஆகியவற்றை அமலாக்க வேண்டும்,கட்டுமான பெண் தொழிலாளர் ஓய்வுவதற்கான வயதை 50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும், கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு சட்டப்படி 6 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக முதல்வருக்கு முறையீடு செய்யப்பட்டது.இதில் கட்டிட சங்க மாவட்ட துணை தலைவர் துரைராஜ், மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி, மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் இப்ராஹிம் மற்றும் கிளை தோழர்கள் திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வடிவேலனிடம் ஒப்படைத்தனர்

    Next Story
    ×