search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
    X

    மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

    • மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்து திருச்சபைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது
    • திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்

    திருச்சி,

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து கொண்டிருக்கின்ற வன்முறைகளை கண்டித்தும், சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட அனைத்து திருச்சபைகள் கூட்டமைப்பு சார்பில் திருச்சி புத்தூர் நால் ரோட்டில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.பாதிரியார் அம்ரோஸ் வரவேற்றார்.பாதிரியார் சார்லஸ் அறிமுக உரை நிகழ்த்தினார். டி.டி.எஸ். குரூஸ் கண்டன முழக்கம் எழுப்பினார்.

    தமிழ் சுவிசேஷ லுத்தரன் அவையின் பேராயர் ஏ.கிறிஸ்டின் சாம்ராஜ், திருச்சி- தஞ்சை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் சந்திரசேகரன், கத்தோலிக்க திருச்சபை ஆயர் எஸ். ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். அருட் சகோதரி பவுலின் மேரி, கவிஞர் நந்தலாலா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் சுந்தரம் ஏசுராஜ் ராஜா, மான்சிங், வி.ஜி. அந்துவான் ஆகியோர் செய்திருந்தனர்.இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு!;-மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி, குக்கி என குழுக்களுக்கு இடையே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அடிப்படையிலான மோதல்களையும் மதக் கலவரத்தையும் வன்முறைகளையும் தீவிரவாத தாக்குதல்களையும் படுகொலைகளையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீதிபதிகளை உள்ளடக்கிய உண்மை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை அறிக்கை வெளியிட வேண்டும்.உயிர் பாதுகாப்பிற்காக வீட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு இடங்களில் தஞ்சம் அடைத்திருக்கிற மக்களுக்கு உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட அவசர உதவிகள் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.வன்முறையில் திட்டமிட்டு எரிக்கப்பட்ட மற்றும் தகர்க்கப்பட்ட தேவாலயங்கள் அரசாங்கத்தின் செலவில் மீண்டும் கட்டி தரப்பட வேண்டும்.மணிப்பூர் மக்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×