search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்
    X

    ரூ.4 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்

    • 749 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது
    • அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 749 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4.08 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.இதில் 65 பயனாளிகளுக்கு தலா ரூ.83,500 வீதம் மொத்தம் ரூ.54,27,500 மதிப்பீட்டில் விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 250 பயனாளிகளுக்கு தலா ரூ.13,549 வீதம் ரூ.33,87,250 மதிப்பீட்டில் வாய்பேச இயலாத மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகளையும், 15 பயனாளிகளுக்கு தலா ரூ.1,06,000 வீதம் ரூ.15,90,000 மதிப்பீட்டில் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளையும் (முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு) வழங்கினர்.அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 37 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை ப்பட் டாக்களையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 33 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 33 பயனாளிகளுக்கு ரூ.225.23 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புக்கான ஆணையினையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் வணிக விரிவாக்கம் சந்தைபடுத்தும் நிதியின்கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், இணை மானிய திட்ட நிதியின்கீழ் 1 பயனாளிக்கு ரூ.4.98 லட்சம் மதிப்பீட்டில் காசோலையும் வழங்கப்பட்டது.மேலும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 30 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 30 பயனாளிகளுக்கு ரூ.15.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், தமிழ்நாடு கதர் கிராம தொழில்வாரியத்தின் சார்பில் 200 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினையும், தோட்டக்கலை–மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் உயரக திசு வளர்ப்பு பூவன் கன்றுகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 62 நபர்களுக்கு பரிசுகளையும் என மொத்தம் 749 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில்மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன், எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் , தியாகராஜன் , எம்.பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன் , துணை மேயர் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×