search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இனியானூரில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அச்சம்
    X

    இனியானூரில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அச்சம்

    • மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அச்சம்
    • தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை

    திருச்சி

    திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாச்சி குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இனியானூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பகுதிகளிலும் பொதுமக்கள் குடியேறி வருகின்றனர்.

    இந்த கிராமத்திலிருந்து சோமரசம்பேட்டை மற்றும் இரட்டை வாய்க்கால்,குழுமாயி அம்மன் தொங்கு பாலம் வழியாக திருச்சிக்கு செல்லும் முக்கிய சாலையின் ஓரத்தில் சமீபகாலமாக அல்லித்துறை சோமரசம்பேட்டை மற்றும் இரட்டை வாய்க்கால் பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைகளின் கழிவுகள் கொட்டப்படுவதால் இப் பகுதிகள் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர்.

    இந்த மருத்துவ கழிவுகளை எரியூட்டும் போது ஏற்படும் புகை மூட்டத்தால் பல்வேறு நோய்கள் வருவதாகவும் மேலும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தின் அருகே தொடக்கப்பள்ளி செயல்படுவதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவ கழிவுகள் கொட்ட ப்படுதை தடுத்து அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    Next Story
    ×