search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தவெக மாநாடு: விடுப்பு தர மறுத்ததால் வேலையை உதறி விட்டேன்- ரசிகர் வீடியோ வைரல்
    X

    தவெக மாநாடு: விடுப்பு தர மறுத்ததால் வேலையை உதறி விட்டேன்- ரசிகர் வீடியோ வைரல்

    • மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
    • இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு வந்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு வந்துள்ளார். மாநாட்டில் வந்த அவர், செய்தியாளர் கேட்ட கேள்விக்கு வேடிக்கையாக பதில் அளித்துள்ளார். அதில் தவெக மாநாட்டிற்கு செல்ல அலுவலகத்தில் விடுமுறை கேட்டேன், ஆனால் நிறுவனத்தில் விடுப்பு தர மறுத்தார்கள், மீறி எடுத்தால் வேலையை விட்டு நீக்குவேன் என கூறினார்கள், நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அப்படியே இங்கு வந்துவிட்டேன் என இளைஞர் பேட்டியளித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சில நாட்களுக்கு முன்னர், விடுப்பு தரவில்லை என்றால் வேலை உதறி விட்டு மாநாட்டிற்கு வருபவனே உண்மையான தொண்டன் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×