என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் அண்ணாநகர் மக்களுக்கு உடனடி 'பட்டா'- தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்
- சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கிராம நத்தத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் மக்கள் பட்டா வேண்டி போராட வேண்டிய நிலையில்தான் நாடு இருக்கிறது.
- மத்திய தொல்லியல் துறை ஆட்சேபனை இருந்தால், முத்தரப்பு களஆய்வு செய்து, மக்களின் கருத்தை அறிந்து, தேவைப்பட்டால் நிபந்தனைகளுடன் பட்டா வழங்கி உதவிடவேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு எண் 9 மற்றும் 14 ஆகியவற்றை உள்ளடக்கிய அண்ணாநகர் புல எண் 160/2 கிராம நத்தத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனுவும் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலமாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கிராம நத்தத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் மக்கள் பட்டா வேண்டி போராட வேண்டிய நிலையில்தான் நாடு இருக்கிறது. மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாமல்லபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை 30-ந்தேதி (இன்று) தொடங்கி ஜூன் 9-ந்தேதி வரை செங்கல்பட்டில் நடக்கும் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) நிவர்த்தி செய்து பட்டா வழங்கவேண்டும்.
இதில் மத்திய தொல்லியல் துறை ஆட்சேபனை இருந்தால், முத்தரப்பு களஆய்வு செய்து, மக்களின் கருத்தை அறிந்து, தேவைப்பட்டால் நிபந்தனைகளுடன் பட்டா வழங்கி உதவிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.