search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றம்
    X

    சவுரிராஜபெருமாள் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. (சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்).

    திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றம்

    • ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய கோவில்.
    • அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம், 3-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமரு கல் அடுத்த திருக்கண்ணபு ரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவில், 108 வைணவ தலங்களில் 17-வது தலமாகும்.

    ஆழ்வார்களால் மங்களாசா சனம் செய்யப்பட்ட பெருமை யுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 29-ந்தேதி தங்க கருடசேவை, அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம், 3-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×