என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று தொடக்கம் - பக்தர்கள் உற்சாகம்
- 8 நாட்கள் நடைபெறும் திருவிழா இன்று தொடங்கி வருகின்ற 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வருகின்ற 12-ந் தேதி நடைபெறுகிறது.
தேனி:
தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா. கடந்த மாதம் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 19-ம் தேதி கம்பம் நடப்பட்டது.
இதனை த்தொடர்ந்து திருவிழாவில் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, பால்குடம் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தக்கூடிய பக்தர்கள் கங்கணம் கட்டி விரதம் இருந்து வந்தனர். அதுபோல திருவிழாவுக்காக நடப்பட்ட கம்பத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித ஊற்றி அம்மனை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் 8 நாட்கள் நடைபெறும் திருவிழா இன்று தொடங்கி வருகின்ற 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவின் போது நேர்த்திக்கடன் செலுத்தக்கூடிய பக்தர்கள் முல்லை பெரியாற்றங்கரை பகுதியில் இருந்து தீச்சட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து கோவில் வரை ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வருகின்ற 12-ந் தேதி நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து உற்சவ கவுமாரியம்மன் தினசரி பூ பல்லாக்கு, முத்து பல்லாக்கு போன்ற பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து தேர் கோவில் வளாக பகுதியை ஒவ்வொரு நாளாக சுற்றி திருவிழா நிறைவிற்கு முன்பு தேர் நிலையை வந்தடையும். அதுபோல திருவிழாவிற்கு வந்து செல்லும் பொது மக்கள் மற்றும் சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக திருவிழா பகுதியில் பலவகையான எந்திர ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆங்காங்கே உணவு கூடங்களும், வியாபார கடைகளும் அமைக்கப்பட்டு ள்ளது. இந்த திருவிழா விற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகமும், சுகாதாரப் பணிகளை வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகமும், பாதுகாப்பு பணிகளை போலீசாரும் செய்து வருகின்றனர்.