search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்
    X

    தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து வேலூருக்கு வந்தவர்கள் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பினர். இதனால் பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வேலூர் பஸ் நிலையத்தில் இன்று காலை பஸ்சில் இடம் பிடிக்க முண்டியடித்த பயணிகளை படத்தில் காணலாம்.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்

    • தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்பினர்
    • பஸ் மற்றும் ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறினர்

    வேலூர்,

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல கடந்த 21-ந் தேதி முதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதே போல ரெயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து பணி செய்யும் இடத்திற்கு அவரவர்கள் இன்று திரும்பினர். இதனால் நேற்று மாலையில் இருந்து வேலூர் புதிய, பழைய பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலையிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்களில் ஊருக்கு செல்வதற்காக பயணிகள் கூட்டம் அதிகரித்தது

    இதனால் பஸ் மற்றும் ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறிச் சென்றனர்.

    Next Story
    ×