search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோர்தானா பகுதியில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
    X

    சூறைக்காற்றால் சேதமான வாழை தோட்டத்தை உதவி கலெக்டர் வெங்கட்ராமன், அமலு விஜயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    மோர்தானா பகுதியில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

    • 17 மின்கம்பங்கள் சேதம்
    • நடவடிக்கை எடுக்க உதவி கலெக்டர், எம்.எல்.ஏ. உறுதி

    குடியாத்தம்,

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா ஊராட்சியில் சில தினங்களுக்கு முன்பு சூறைக்காற்று வீசியது.

    இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் நாசமாயின. வீடுகள், மாட்டு கொட்டகைகள், மரங்கள், 17 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் பல பகுதிகள் மின்தடை ஏற்பட்டது.

    சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் உடனடியாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு உரிய கணக்கெடுக்கு நடந்த பின் அதற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

    அனைத்து பகுதிகளிலும் விரைவாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

    ஆய்வின் போது தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம் கார்த்திகேயன்,

    ஆர். திருமலை, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×