search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை கெங்கையம்மன் தேர் திருவிழா
    X

    சாலை கெங்கையம்மன் தேர் திருவிழா

    • 22-ந் தேதி நடக்கிறது
    • மஞ்சள்நீர் விடையாற்று உற்சவம் திருவீதி உலா நடைபெறும்

    வேலுார்,

    வேலுார் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் திருத்தேர் திருவிழா, இன்று தொடங்கி, வரும் 24-ந்் தேதி வரை நடக்கிறது.

    இதை முன்னிட்டு, இன்று காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், 10 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல், மதியம் 2 மணிக்கு சப்தகன்னிகள் செவிட்டாத்தம்மன் முனீஸ்வரர் ஆகிய பரிவாரங்களோடு ஜமாதிமலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் வயிரநாதருக்கு, பால் பொங்கல் வைத்தல், இரவு11 மணிக்கு திருக்காப்பு அணிவித்தல் நடந்தது.

    தொடர்ந்து, 16 மற்றும் 17-ந் தேதிகளில் சிறப்பு அபிஷேகமும், 18-ந் தேதி மாலை 6 மணிக்கு மறு காப்பு அணிவித்தல் மற்றும் இரவு 7 மணிக்கு ஸ்ரீ துர்கையம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து, 19, 20,21 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு முறை யே ஆதிபராசக்தி, தனலட் சுமி, சிவலிங்க பூஜை திருவீதி உலா நடக்கிறது.22-ந் தேதி காலை 7 மணிக்கு ஸ்ரீ சாலை கெங் கையம்மனுக்கு சீர்வரிசை' செலுத்துதல், காலை 9 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் ஸ்ரீ சாலை கெங்கையம்மன் திருத்தேர் திருவீதி உலா, மாலை 6 மணிக்கு அந்திமழை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து, 23-ந் தேதி காலை 9 மணிக்கு சிரசு ஏற்றம், விஸ்வரூப காட்சி, மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர், 24-ந் தேதி மதியம் 2 மணிக்கு மஞ்சள்நீர் விடையாற்று உற்சவம் ஸ்ரீ சாலை கெங்கையம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    Next Story
    ×