search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகப்பேறு மருத்துவத்திற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடும் வத்தல்மலை கிராம மக்கள்
    X

    மகப்பேறு மருத்துவத்திற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடும் வத்தல்மலை கிராம மக்கள்

    • தேனீக்கள் கடி மற்றும் பாம்பு கடிக்கான சிகிச்சைக்காக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைகின்றனர்.
    • வத்தல் மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே முழுமையாக பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கொண்டகரஹள்ளி ஊராட்சியில் வத்தல் மலை அமைந்துள்ளது. இங்கு ஒன்றியங்காடு, பால்சிலம்பு, நாயக்கனூர், பெரியூர் உள்ளிட்ட 10 மலை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்கள் முழுமையாக மலைகளை ஒட்டிய பகுதியாக உள்ளது. இங்கு வத்தல்மலை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு மருத்துவமனையின் விழிப்புணர்வு மற்றும் தொடர் தரமான சிகிச்சையின் காரணமாக மலை கிராமங்களில் உள்ளவர்கள் வீட்டில் பிரசவம் பார்த்தல் என்பதை முழுமையாக மறந்து தற்போது அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மகப்பேறு சிகிச்சைக்காக முழுமையாக நம்பி வருகின்றனர். அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதால் எந்த நேரத்திலும் சிகிச்சைக்கு மக்கள் செல்கின்றனர்.

    சுகப்பிரசவ மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்டவை வத்தல் மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே முழுமையாக பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனையும் தாண்டி சில அவசர சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட வற்றிற்க்கு மட்டும் வத்தல் மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    வத்தல் மலையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிக அளவில் தேனீக்கள் கடி மற்றும் பாம்பு கடிக்கான சிகிச்சைக்காக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைகின்றனர் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    மேலும் கொரோனா பேரிடர் காலங்களில் கொரோனா தடுப்பூசி அனைத்து பொதுமக்களும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை மருத்துவ பணியா ளர்கள் தொடர் விழிப்புணர்வு ஏற்படு த்தினர். இதன் காரணமாக கொரோனோ தடுப்பூசி இப்பகுதியில் 100 சதவீதம் செலுத்த ப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிட த்தக்கது.

    Next Story
    ×