search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    X

    ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    • தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தொழிலாளர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மை விழிச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆணையின்படி திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை விநியோ கிக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை விநியோ கிக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.

    இதில் தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 10 நிறுவனங்கள் மீது முரண்பாடு காணப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் அந்த நிறுவ னங்களின் மீது கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏப்ரல் மாதம் குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 7 நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அந்த நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலா ளர்களுக்கு குறைவு சம்பளம் ரூ.4 லட்சத்து 71 ஆயிரத்து 879 மதுரை தொழிலாளர் இணை ஆணையரால் பெற்று வழங்கப்பட்டது.

    அனைத்து நிறுவ னங்களும் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் அந்தந்த தொழில் நிறுவ னங்களுக்கு நிர்ணயி க்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை (ஊதியம்+ அகவிலைப்படி) அளிக்க வேண்டும். குறைவு ஊதியம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 04562 225130 என்ற விருதுநகர் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணை, அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட சிறப்பாய்வினை விருதுநகர், அருப்புக் கோட்டை, சிவகாசி முதல் மற்றும் 2-ம் சரகம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபா ளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மேற்கொ ண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×