search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 29-ந் தேதி கண்டன பொதுக்கூட்டம்
    X

    ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

    வருகிற 29-ந் தேதி கண்டன பொதுக்கூட்டம்

    • சிவகாசியில் வருகிற 29-ந் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • இதில் பங்கேற்க வருகைதரும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    சிவகாசி

    விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், விலை வாசியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார்நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் அ.தி.மு.க. இடைக்கால பொது ச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கண்டன பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமாரன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் கலாநிதி, நகரச்செயலாளர் முகமது நயினார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச்செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராசா முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், சிவகா சிக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும். கண்டன பொதுக்கூட்டம் தி.மு.க. அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். கண்டன பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் பொது மக்களுக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வேலாயுதம், அமைப்புசாரா ஓட்டுநா் அணிமாவட்ட செயலாளா் சேதுராமன், நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், மிக்கேல்ராஜ், பேரவை சரவணன், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவ ணன், பொதுக்குழு உறுப்பினர் அருணா நாகசுப்பிரமணியன், நகர துணை செயலாளர் கண்ணன், சிவகாசி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம், மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×