search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்ட எல்லையில், நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை
    X

    தூத்துக்குடி மாவட்ட எல்லையில், நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை

    • பல்வேறு புதிய திட்டங்கள் பற்றி ஆலோசிப்பதற்கு மாவட்டம் வாரியாக முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
    • தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்பபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர்

    தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அரசுதிட்டங்களில் செயலாக்கம் குறித்தும், பல்வேறு புதிய திட்டங்கள் பற்றி ஆலோசிப்பதற்கும் மாவட்டம் வாரியாக முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் நடைபெறும் ஆய்வு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.

    உற்சாக வரவேற்பு

    இதனால் தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்ப புரத்தில் நாளை மதியம் 12 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட அனைத்து நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×