என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மழை குறைந்ததால் முல்லைபெரியாறு, வைகை அணைக்கு நீர்வரத்து சரிவு
- பருவமழை காரணமாக முக்கிய ஆறுகளான வராகநதி, வைகை, முல்லைபெரியாறு, கொட்டக்குடி ஆகியவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
- கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது கேரள மாநிலம், மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீர் திறக்க ப்பட்டது. முக்கிய ஆறுக ளான வராகநதி, வைகை, முல்லைபெரியாறு, கொட்டக்குடி ஆகியவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 136.55 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1398 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 69.82 அடியாக உள்ளது. 966 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1269 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 60 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. 140 கனஅடிநீர் வருகிறது. 90 கனஅடிநீர் உபரியாகவும், 30 கனஅடி நீர் பாசனத்தி ற்கும் திறக்கப்படுகிறது. போடியில் மட்டும் 2.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.