என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீர்த்தேக்கம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை:தூத்துக்குடி மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்-மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்
- 10 நாட்களில் பருவமழை பெய்ய தொடங்கும் என கூறப்படுகிறது.
- குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மாநகராட்சியின் கடமையாகும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் இருந்து வல்லநாடு நீரேற்று நிலையம் மற்றும் கலியாவூர் நீர்த்தேக்கம் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாநகர பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் பருவ மழை குறைவாக பெய்துள்ளதால் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்ககூடிய பாபநாசம் அணை முழுமையாக நிரம்பவில்லை. கோடைகாலம் ஆரம்பமாகி உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை கொஞ்சம் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையிலும் தூத்துக்குடி மாநகர 60 வார்டு பகுதி மக்களும் பாதிக்காத வகையில் குடிதண்ணீர் முறைப்படுத்தி சூழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி வல்லநாடு, கலியாவூர் ஆகிய பகுதிகள் மட்டுமன்றி தாமிரபரணி நதிக்கரை பகுதியில் கிணறு அமைக்க ப்பட்டு அதன் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யும் முறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற் கொண்டார். அப் போது அவர் கூறுகையில்,
தாமிரபரணி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் அளவு குறைவாக இருப்ப தால் மழை குறைந்துள்ள தால் மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களில் பருவமழை பெய்ய தொடங்கும் என கூறப்படுகிறது. எனவே மக்கள் கூடுமானவரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கோடைகாலம் ஆரம்பமாகி இருப்பதால் மக்களின் தாகம் தீர்க்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மாநகராட்சியின் கடமையாகும். ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுபவர்களை உங்களுக்கு கொடுத்தி ருப்பது பதவி அல்ல மக்களுக்கு பணி செய்யும் பொறுப்பு என்று கூறியது மட்டுமின்றி எல்லோரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை கண்காணிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
எனவே அதன் அடிப்படையில் மக்கள் பணியை நாங்கள் தொடர்ந்து செய்வதற்கான முயற்சி களை அதிகாரி களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.
24 மணி நேரமும் தூத்துக்குடி மாநகர மக்கள் என்னை தொடர்பு கொண்டு பேசலாம் மக்கள் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அப்போது அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்