search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நீலகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சுற்றுலா துறையை மேம்படுத்த உள்ளோம்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு
    X

    நீலகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சுற்றுலா துறையை மேம்படுத்த உள்ளோம்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

    • தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆவதையொட்டி சாதனை விளக்க பொதுக்கூட்டம் குன்னூரில் நடைபெற்றது.
    • 10 ஏக்கர் பரப்பளவில் இந்த மினி டைட்டடல் பார்க் அமைய உள்ளது.

    குன்னூர்,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆவதையொட்டி சாதனை விளக்க பொதுக்கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறைக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய தமிழக முதல்-அமைச்சரின் ஆலோசனை யின் படி ரூ.100 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளையும், திட்ட பணிகளையும் நீலகிரி மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்த இருக்கின்றோம்.

    நீலகிரி மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் பணியாற்றி வந்த தொழிற்சாலை பயனற்று இருக்கும் நிலையில் அந்தப் பகுதியில் ஒரு டைட்டல் பார்க் அமைக்கப்படும். இது 1000 பேருக்கு வேலைகள் கிடைக்கும். சுமார் ரூ.100 கோடி செலவில் இந்த மினி டைட்டடல் பார்க் அமைந்தால் 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 10 ஏக்கர் பரப்பளவில் இந்த மினி டைட்டடல் பார்க் அமைய உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக், தலைமை பேச்சாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின், நகர மன்ற துணைத் தலைவரும் மாநில விளையாட்டு மேம்பாட்டு துறை துணை செயலாளருமான வாசிம்ராஜா, நகரப் பொருளாளர் ஜெகநாத், குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, குன்னூர் நகர மன்ற உறுப்பினர்கள், மாணவர் அணியினர், மகளிர் அணியினர். கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×