search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே பொதுமக்கள் மனுவாக கொடுத்ததை நாங்கள் ஆணையாக வழங்குவோம்: மாவட்ட கலெக்டர் உறுதி
    X

    தியாகதுருகம் அருகே பல்லகச்சரி கிராமத்தில் மக்களைத் தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது.

    தியாகதுருகம் அருகே பொதுமக்கள் மனுவாக கொடுத்ததை நாங்கள் ஆணையாக வழங்குவோம்: மாவட்ட கலெக்டர் உறுதி

    • மாவட்ட கலெக்டர் பொதுமக்கள் மனுவாக கொடுத்ததை நாங்கள் ஆணையாக வழங்குவோம் என்று கூறினார்.
    • துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி மற்றும் பீளமேடு ஆகிய ஊராட்சிகளில் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது. பல்லகச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொதுமக்கள் வழங்கும் அடிப்படை கோரிக்கைகள், நீண்டகால கோரிக்கைகளில் நிவர்த்தி செய்ய முடியும் கோரிக்கைகளை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். மேலும் நிவர்த்தி செய்ய முடியாத மனுக்கள் குறித்த காரணங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் பொதுமக்கள் மனுவாக கொடுத்ததை நாங்கள் ஆணையாக வழங்குவோம் என்று கூறினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை வரவேற்றார்.

    மேலும் இதனைத் தொடர்ந்து பீளமேடு ஊராட்சியில் நடைபெற்ற மக்களைத் தேடி மனுக்கள் பெரும் முகாமில் பொதுமக்களிடமிருந்து 353 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி இயக்குனர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஒன்றிய பொறியாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×