search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுமன்னார்கோவில்  மனுநீதி நாள் முகாமில் 1,027 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்:  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்
    X

    மனுநீதிநாள் முகாமில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு நலத்திட்டட உதவிகள் வழங்கினார். 

    காட்டுமன்னார்கோவில் மனுநீதி நாள் முகாமில் 1,027 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்

    • எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மதிப்பிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
    • திட்டங்களை வழி வகுத்து செயல்படுத்தி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறி வருகின்றனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் மனுநீதினால் முகம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். முகாமில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,027 பயனாளிகளுக்கு 5 கோடி 12 லட்சம் மதிப்பிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில்:-

    மனுநீதி நாள் முகாம்களில் மக்களின் குறைகளை போக்குவதற்கு அவர்களின் பகுதிகளிலேயே நேரடியாக சென்று அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் மக்கள் நலதிட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு தகுந்த தீர்வு காண்பதற்கு ஏதுவாக இதுபோன்ற குறை தீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மக்களுக்காக பல்வேறு முன்னேற்ற திட்டங்களை வழி வகுத்து செயல்படுத்தி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறி வருகின்றனர். வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் அதிக இலாபம் பெறலாம். இதனை வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மற்றும் விவசாயிகள் இணைந்து செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் நமது பாரம்பரிய சிறுதானிய வகை உணவிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் கேட்டுக்கொண்டார். இதில் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ, உதவி ஆட்சியர் (சிதம்பரம்) சுவேதா சுமன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×