search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்
    X

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரனிடம் , ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன் கோரிக்கை மனு வழங்கியபோது எடுத்த படம்.

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்

    • 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்.
    • புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தலைமையில் தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடையம் பெரும்பத்து பஞ்சாயத்துக்குட்பட்ட வெய்க்காலிபட்டியில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி, மளிகை சாமான்கள் உள்பட பல பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் ஏற்பாடு செய்திருந்தார்.

    விழாவில் நலத்திட்ட பொருட்களை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் வழங்கினார். மேலும் புதிய அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    பின்னர் விழாவில் கடையம் பெரும்பத்து பகுதியில் வாறுகால் இல்லாத பகுதிகளில் வாறுகால் அமைக்க கோரிக்கை மனுவை அமைச்சரிடம் கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், மாவட்ட கவுன்சிலர்கள் சுதாசின்னதம்பி, மைதீன் பீவி , மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், கடையம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் மாயவன், ஜெயக்குமார், தொழிலதிபர் பரமசிவன், ஒன்றிய கவுன்சிலர் மாரிக்குமார், ரம்யா ராம்குமார், முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அசன் பீவி மற்றும் கவுன்சிலர்கள் பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×