search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனி குடிநீர் திட்டம் யார் கொண்டுவந்தது? சேலம் மாநகராட்சி கூட்டத்தில்  தி.மு.க.-அ.தி.மு.க. மோதல்
    X

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசிய காட்சி.

    தனி குடிநீர் திட்டம் யார் கொண்டுவந்தது? சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. மோதல்

    • சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது.
    • துணை ஆணையாளர் அசோக்குமார், துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ேசலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது. துணை ஆணையாளர் அசோக்குமார், துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். கவுன்சிலர்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை என்று சரமாரரியாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மண்டல தலைவர் கலையமுதன் பேசுகையில், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள இடம் பஸ் நிலைய பயன்பாட்டிற்கு தான், அதில் பொருட்காட்சி நடத்த கூடாது, அதிகாரிகள் மாநகராட்சி பணிகளில் பல தவறுகள் செய்கிறார்கள் என்று கூறினார்.

    அதற்கு மேயர் பதில் அளித்து பேசுகையில் அதிகாரிகள் யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மண்டல தலைவர் கலையமுதன் நீண்ட நேரம் பேசியதால் அதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

    மேலும் தனி குடிநீர் திட்டம் முழுவதும் தி.மு.க. கொண்டு வந்ததாக கலையமுதன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுனசிலர்கள் எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் வெளி நடப்பு செய்தனர்.

    பின்னர் யாதவமூர்த்தி கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.140 கோடியில் தனி குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் தி.மு.க. ஆட்சியில் ரூ.185 கோடியிலும், தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.235 கோடியிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கும் போது மேலும் ரூ. 60 லட்சம் ஓதுக்கீடு செய்து மேட்டூர் அணையில் 20 அடி தண்ணீர் இருந்தாலும் சேலத்தில் மேடான பகுதி உள்பட அனைத்து பகுதிக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.

    தனி குடிநீர்திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் முழுமையாக கொண்டு வந்தததாக கூறுகிறார்கள். இதனை எதிர்த்து வெளி நடப்பு செய்கிறோம் என்றார்.

    Next Story
    ×