search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருத்துறைப்பூண்டி  பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்
    X

    திருத்துறைப்பூண்டி பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் நடந்த மகளிர் தினம் கொண்டாட்டம் நடந்தது.

    திருத்துறைப்பூண்டி பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்

    • பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
    • பெண் பயனாளிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

    பாரத மாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார்.

    காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் சந்திரசேகரன், பிரதிநிதி அமராவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காப்பீட்டு கழக அலுவலர் சுவாமிநாதன் வரவேற்றார்.

    உலகில் வாக்கு அளிக்கின்ற ஓட்டு போடும் உரிமையை பெண்களுக்கு முதன்முதலாக வழங்கிய அதிகாரப்பூர்வமான தினமாகவும் பெண்கள் சுயசார்புடன் கல்வி, பொருளாதாம், சமூக ரீதியாகவும், வலிமைமிக்க, அதிகாரமிக்க தலைமை பண்புடன் வாழ்வதற்கு வழிவகை செய்த நாளாக உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.

    இப்படி கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் நிராதரவாக அன்புக்கு ஏங்கி நிற்கும் பெண்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என்று காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தில் பெண்கள் இல்லத்தில் தங்கியுள்ள அனைத்து பெண் பயனாளிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பாரதமாதா இல்லக் காப்பாளர்கள் புனிதா, கனிமொழி, துர்காதேவி, உளவியல் ஆற்றுப்படுத்தனர் கௌசல்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க செயலாளர் காந்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×