search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர் காங்கிரஸ் சார்பில் தீப்பந்தம் ஏந்தி, ெரயில் மறியல் போராட்டம்
    X

    காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் கடலூரில் பேட்டியளித்த போது எடுத்த படம்.

    இளைஞர் காங்கிரஸ் சார்பில் தீப்பந்தம் ஏந்தி, ெரயில் மறியல் போராட்டம்

    • பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தவறுதலாக பேசியதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது.
    • மக்கள் பிரச்சனைக்காக ராகுல் காந்தி தொடர்ந்து போராடி வருவதோடு ஊழலுக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் தலைவராவார்..

    கடலூர்:

    காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

    பா.ஜ.க. அரசு அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் ராகுல் காந்தியை சீண்டி வருகிறார். மேலும் பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தவறுதலாக பேசியதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. வரலாற்றில் இல்லாதது ஒன்றாகும்.ஆனால் இதற்கு ராகுல் காந்தி பயப்படவில்லை. ஆனால் மக்கள் பிரச்சனைக்காக ராகுல் காந்தி தொடர்ந்து போராடி வருவதோடு ஊழலுக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் தலைவராவார். ஆனால் பிரதமர் மோடி ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறார். மேலும் ராகுல் காந்தி அதானி மக்கள் பணத்தில் ஊழல் செய்ததாக கூறியதை பிரதமர் மோடியால் ஏற்க முடியாததால். காங்கிரஸ் கட்சி மக்களை முறையாக அணுகி அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க எண்ணுகிறார்கள்.

    பா.ஜ.க அரசு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மக்கள் மத்தியில் திணித்து வருவதோடு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ராகுல் காந்தியை அழித்துவிடலாம் என பா.ஜ.க. நினைத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி பக்கம் தான் மக்கள் இருந்து வருகின்றனர். ஆகையால் ராகுல் காந்திக்காக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டம் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி தீப்பந்தம் ஏந்தியும், 20-ந்தேதி சாலை மறியல் போராட்டம், 25-ந்தேதி ெரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார். அப்போது நிர்வாகிகள் வக்கீல் கலையரசன் ராமராஜ், கடல் கார்த்திகேயன், அன்பழகன், கலைச்செல்வன், வசந்த ராணி, ஏழுமலை, ஆறுமுகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×