என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உண்மை எது
எல்லை பாதுகாப்பு படை பெயரில் போலி டுவிட்டர் கணக்கு
- போலி வலைத்தளங்களை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
- பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அரசுத் துறைகள் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் இப்போது இணைதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிடப்படுகின்றன. அதேசமயம் அரசுத் துறைகளின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான சமூக வலைத்தள பக்கங்களும் தகவல்களை பரப்பி மக்களை குழப்புகின்றன. எனவே இவற்றை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
போலிச் செய்திகள் பரவுவதை சரிபார்ப்பதற்காக, பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது போலி செய்திகள் மற்றும் போலி வலைத்தளங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.
அவ்வகையில், எல்லைப் பாதுகாப்பு படையின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கம் திறக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் கூறி உள்ளது. @BsfIndia0 என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கு அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்றும், எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு @BSF_India என்றும் தெரிவித்துள்ளது.