search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமானப்படை தளம் விரிவாக்கம் - நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளே தயாரித்த வரைபடம்
    X

    விவசாயிகள் தயாரித்த வரைபடத்தை படத்தில் காணலாம்

    விமானப்படை தளம் விரிவாக்கம் - நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளே தயாரித்த வரைபடம்

    • வேறு தொழில் தெரியாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும்.
    • முடிந்த அளவு விவசாய நிலங்களை தவிர்த்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் 86.38 ஏக்கர் நிலம் விமானப்படை தள விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளது.பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு தொழில் செய்துவருகிறோம். விவசாயத்தை விட்டால் வேறு தொழில் தெரியாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும். சூலூர் விமானப்படை தளத்தை ஒட்டி, ஏறத்தாழ 400 ஏக்கர் தரிசு நிலம் கேட்பாரற்று நீண்ட காலமாக கிடைக்கிறது.

    மொத்தம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும், 86.38 ஏக்கருக்காக விவசாய நிலங்களை எடுக்காமல், பயன்பாடின்றி கிடக்கும் தரிசு நிலத்தை எடுக்க தமிழக அரசின் வருவாய்த்துறை முன்வர வேண்டும் எனவிவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இக்கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக முதல்வர், மத்திய அமைச்சர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விவசாயிகளே வரைபடம் ஒன்றை தயாரித்துள்ளனர். அதில் கையகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள 86.38 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் பயன்பாடு இன்றி கிடக்கும் தரிசு நிலம் ஆகியவற்றை இரு வேறு வண்ணங்களில் காட்டும்படியாக உள்ளது. முடிந்த அளவு விவசாய நிலங்களை தவிர்த்துவாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×