என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அயோத்தி ராமர் கோவிலில் 1½ கோடி பக்தர்கள் தரிசனம்
- கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
- ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுசெயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:-
அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்முதல் இதுவரை 1½ கோடி பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ராமபிரானை தரிசித்துள்ளனர். கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கோவில் கீழ்தளம் கட்டுமான பணி முழு அளவில் முடிந்துள்ளது. முதல் தளத்தில் விடுபட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.
கோவிலை சுற்றி 14 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டி முடிக்கப்படும். கோவில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனை உள்ளூர் மக்களே அவரவர் அக்கறை எடுத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.