search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மந்திரிகள் 13 பேர் அதிர்ச்சி தோல்வி
    X

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மந்திரிகள் 13 பேர் அதிர்ச்சி தோல்வி

    • ஜெகதீஷ் ஷெட்டர் தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதியில் தோல்வி தழுவினார்.
    • லட்சுமண் சவதி வெற்றிக்கனியை ருசித்துள்ளார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் முக்கியமான 13 மந்திரிகள் மற்றும் சபாநாயகர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர். அதாவது இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் (முத்தோல்), சட்டத்துறை மந்திரி மாதுசாமி (சிக்கநாயக்கனஹள்ளி), தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி (பீலகி), நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் (ஒசக்கோட்டை), வீட்டு வசதி மந்திரி சோமண்ணா (சாம்ராஜ்நகர் மற்றும் வருணா), சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் (சிக்பள்ளாப்பூர்), விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் (ஹிரேகெரூர்), போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு (பல்லாரி புறநகர்), பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் (திப்தூர்), சர்க்கரை மந்திரி சங்கர் பட்டீல் (நவலகுந்து), பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார் (எலபுர்கா), வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் (கனகபுரா) என மொத்தம் 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்துள்ளனர். இதில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட மந்திரி ஆர்.அசோக் பத்மநாபநகரில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காமல் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதியில் தோல்வி தழுவினார். அதுபோல் பா.ஜனதாவில் இருந்து விலகி அதானி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட லட்சுமண் சவதி வெற்றிக்கனியை ருசித்துள்ளார்.

    Next Story
    ×