search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 இந்திய வீரர்களுக்கு பயிற்சி
    X

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 இந்திய வீரர்களுக்கு பயிற்சி

    • நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • பயிற்சி அடுத்த மாதம் தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது, இந்திய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

    இந்த நிலையில் 2 இந்திய விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி அடுத்த மாதம் தொடங்குகிறது.

    பயிற்சி பெறும் வீரர்களில் ஒருவர் ஏற்கனவே ரஷியா மாஸ்கோவின் யூரி ககாரின் விண்வெளிப் பயிற்சி மையத்தில் அடிப் படைப் பயிற்சி பெற்றவர் ஆவார். டெக்சாசில் பயிற்சியை முடித்த பிறகு, இந்த இரண்டு விண்வெளி வீரர்களில் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்திய-அமெரிக்க விண்வெளி பயணத்தில் சேருவார்.

    இந்த விண்வெளிப் பய ணம் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அக்சியோம் ஆகியவை இந்திய விண்வெளி வீரர்களுக்கு தேவையான நிபுணத்துவத்தை பெற உதவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நாசா பயிற்சி மற்றும் இந்திய-அமெரிக்க மிஷன் ஆகியவை இந்தியாவின் ககன்யான் விண்வெளி திட்டத்திற்கான ஆயத்தப் படிகளாகும்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "விண்வெளிப் பயணத்திற்கான பொதுவான பயிற்சியை இந்திய வீரர்கள் பெற்றிருந்தாலும், இந்தியாவில் அவர்களது பயிற்சியின் பெரும்பகுதி ககன்யான் மாட்யூல்களில் கவனம் செலுத்தியது.

    எனினும் அவர்கள் சர்வதேச விண்வெளி நிலைய மாட்யூல்கள் மற்றும் நெறிமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்" என்றார்.

    மேலும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன் கூறும்போது, "இந்த திட்டம் இந்திய விண்வெளி வீரர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தை வெளிப்படுத்தும். இது ககன்யான் திட்டத்தை நோக்கிய ஒரு மிக முக்கியமான படியாகும்" என்றார்.

    Next Story
    ×