என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திருப்பதியில் கஞ்சா விற்பனை- தமிழக மாணவர்கள் 2 பேர் கைது
- போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர்.
திருப்பதி:
திருப்பதி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
திருப்பதி மாவட்ட எஸ்.பி. பரமேஸ்வர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று திருப்பதி ரூரல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தனபல்லி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.
மேலும் இருவரும் திருப்பதியில் உள்ள சட் டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இச்சாபுரம் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா வழக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று திருப்பதி ரூரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவ பிரசாத் தெரிவித்தார்.