என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன: ரிசர்வ் வங்கி
- வங்கிக்கு திரும்பிய 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
- தற்போது ரூ.6,970 கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என கூறப்பட்டு உள்ளது.
மும்பை:
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது. இந்த நோட்டுகளை பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தவோ, வங்கிகளில் மாற்றவோ செய்யலாம் என அறிவித்தது. இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி வரை அவகாசமும் அளிக்கப்பட்டது.
பின்னர் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் மாற்றிக்கொள்ளவும் பல்வேறு கட்டமாக அறிவிப்புகளை வழங்கியது. அத்துடன் வங்கிக்கு திரும்பிய 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த 31-ந்தேதி வரை வங்கிக்கு திரும்பிய 2,000 ரூபாய் நோட்டு விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதன்படி மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், தற்போது ரூ.6,970 கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 98.04 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி இருப்பதாக ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் புனீத் பஞ்சோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.