search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    விமானத்தில் செல்போன் தீப்பிடித்த விவகாரம்: விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் சாம்சங் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம்
    X

    விமானத்தில் செல்போன் தீப்பிடித்த விவகாரம்: விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் சாம்சங் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம்

    சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ‘சாம்சங் கேலக்சி நோட்-2’ செல்போன் தீப்பிடித்தது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் சாம்சங் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்
    புதுடெல்லி:

    சிங்கப்பூரில் இருந்து கடந்த 23-ந் தேதி சென்னை வந்த இன்டிகோ விமானத்தில் பயணி ஒருவரின் ‘சாம்சங் கேலக்சி நோட்-2’ செல்போன் விமானத்திலேயே தீப்பிடித்து எரிந்தது. உடனே ஊழியர்கள் அந்த செல்போனை தண்ணீருக்குள் போட்டு பாதுகாப்பாக கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சாம்சங் கம்பெனிக்கு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது.

    அதன்படி சாம்சங் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் நேற்று டெல்லியில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் ஆஜரானார்கள். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் இதுதொடர்பாக விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர். கேலக்சி நோட் வரிசை ஸ்மார்ட்போன்கள் சிலவற்றில் பேட்டரி அதிக சூடாவது, வெடிப்பது போன்ற பிரச்சினைகளுக்கான தொழில்நுட்ப காரணம் குறித்து அவர்கள் விளக்கியதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×