என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவில் ஆட்சி நாற்காலி யாருக்கு? - சட்டசபை தேர்தலில் நாளை வாக்குப்பதிவு
Byமாலை மலர்11 May 2018 4:12 PM IST (Updated: 11 May 2018 4:12 PM IST)
கர்நாடக மாநில சட்டசபையில் நடக்கும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரசும், இழந்த ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவும் நாளைய தேர்தலில் பலப்பரீட்சையில் குதிக்கின்றன. #KarnatakaElections2018
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடக சட்டசபைக்கு நாளை (12-ந் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன.
இதில் ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 223 தொகுதிகளுக்கும் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 55 ஆயிரம் 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி ஆண் வாக்காளர்கள், 2.44 பெண் வாக்காளர்கள், 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதல் வாக்குசாவடிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை வேன், லாரி, பஸ்கள் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது. இதே போல பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாரும் தேர்தல் அதிகாரிகளும் அந்தந்த வாக்குசாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் பகிரங்க பிரசாரம் முடிவுக்கு வந்தாலும், அவர்கள் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க தடை இல்லை. ஆனால் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.
என்றாலும் கர்நாடக தேர்தலில் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்கி உள்ளனர். மாநிலம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடிக்கும் மேல் கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியது. இந்த தேர்தலில் வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி சோதனை நடத்தி கருப்பு பணத்தை கைப்பற்றினர். காங்கிரஸ் மற்றும் மதசார் பற்ற ஜனதா தள வேட்பாளர்கள் வீடுகளிலும், முதல் மந்திரி சித்தராமையா தங்கிய ஓட்டலிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றினார்கள்.
பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து 21 இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக கர்நாடக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார்.
சோனியா காந்தி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், வீரப்பமொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.
கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சாமூண்டீ ஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை சாமூண்டீஸ்வரி தொகுதியில் மேற்கொண்டார்.
மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. மதசார்பற்ற ஜனதா தள தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, முதல் மந்திரி வேட்பாளர் குமாரசாமி உள்ளிட்ட பலர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதா கட்சி 22 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்து தென் மாநிலத்தில் காலூன்ற நினைக்கிறது. மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நினைப்பில் அந்த கட்சி உள்ளது.
தற்போது 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் கர்நாடகாவில் வெற்றி பெற்று ஆட்சி தக்க வைக்கவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் கர்நாடகத்தை நம்புகிறது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெறுகிறது. #KarnatakaElections2018
கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடக சட்டசபைக்கு நாளை (12-ந் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன.
இதில் ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 223 தொகுதிகளுக்கும் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 55 ஆயிரம் 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி ஆண் வாக்காளர்கள், 2.44 பெண் வாக்காளர்கள், 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதல் வாக்குசாவடிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை வேன், லாரி, பஸ்கள் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது. இதே போல பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாரும் தேர்தல் அதிகாரிகளும் அந்தந்த வாக்குசாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
வாக்குசாவடி அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்கவும், பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
என்றாலும் கர்நாடக தேர்தலில் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்கி உள்ளனர். மாநிலம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடிக்கும் மேல் கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியது. இந்த தேர்தலில் வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி சோதனை நடத்தி கருப்பு பணத்தை கைப்பற்றினர். காங்கிரஸ் மற்றும் மதசார் பற்ற ஜனதா தள வேட்பாளர்கள் வீடுகளிலும், முதல் மந்திரி சித்தராமையா தங்கிய ஓட்டலிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றினார்கள்.
223 தொகுதிகளில் மொத்தம் 2,636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்றும், மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.
பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து 21 இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக கர்நாடக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார்.
சோனியா காந்தி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், வீரப்பமொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.
கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சாமூண்டீ ஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை சாமூண்டீஸ்வரி தொகுதியில் மேற்கொண்டார்.
மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. மதசார்பற்ற ஜனதா தள தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, முதல் மந்திரி வேட்பாளர் குமாரசாமி உள்ளிட்ட பலர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதா கட்சி 22 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்து தென் மாநிலத்தில் காலூன்ற நினைக்கிறது. மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நினைப்பில் அந்த கட்சி உள்ளது.
தற்போது 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் கர்நாடகாவில் வெற்றி பெற்று ஆட்சி தக்க வைக்கவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் கர்நாடகத்தை நம்புகிறது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெறுகிறது. #KarnatakaElections2018
Next Story
×