search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருத்து கணிப்புகள் எல்லாம் 2 நாள் கேளிக்கை - சித்தராமையா பேட்டி
    X

    கருத்து கணிப்புகள் எல்லாம் 2 நாள் கேளிக்கை - சித்தராமையா பேட்டி

    கர்நாடக தேர்தலுக்கு பிறகு வெளியாகும் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் 2 நாள் கேளிக்கை. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும் என சித்தராமையா தெரிவித்துள்ளார். #Karnatakaelections2018 #exitpolls #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    ஹெப்பல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இரண்டாம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கு பின்னர் கிடைக்கும் ஒப்புகை சீட்டில் வாக்களித்த வேட்பாளருக்கு பதில் வேறு பெயர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் என இன்றைய வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது.

    கர்நாடக மாநில சட்டசபைக்கு உட்பட்ட 222 தொகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தியாவின் பிரபல ஊடகங்கள் நடத்திய  வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன.

    அதன்படி, ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றி மீண்டும் அரசு அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஓரிரு ஊடகங்களின் கருத்து கணிப்பின்படி அங்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையலாம் என குறிப்பிடுகின்றன.

    இதேபோல், சில ஊடகங்கள் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையலாம் என யூகித்துள்ளன.

    முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 30 முதல் 40 இடங்களில் வெற்றி பெறலாம் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை இழக்கும் வேளையில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க இந்த கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சிக்கும் முயற்சிக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்த கருத்து கணிப்புகள் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ள கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, கர்நாடக தேர்தலுக்கு பிறகு வெளியாகும் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் 2 நாள் கேளிக்கை. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

    தேர்தலுக்கு பின்னால் வெளியாகும் தகவல்கள் அனைத்துமே ஆறடி உயரம் கொண்ட ஒருவர் நான்கடி ஆழம் கொண்ட ஆற்றில் நடந்து அக்கரைக்கு போக முடியாமல் திண்டாடுவதைப் போன்றதாகும்.

    எனவே, காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலவிரும்பிகள் அனைவரும் இந்த கருத்து கணிப்புகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உற்சாகமாக உங்கள் வார இறுதி விடுமுறையை நன்றாக அனுபவியுங்கள். நாம் நிச்சயமாக மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என குறிப்பிட்டுள்ளார். #Karnatakaelections2018 #exitpolls #Siddaramaiah
    Next Story
    ×