search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மத்தியப்பிரதேசத்தில் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் தராததால் துப்பாக்கியால் சுட்ட மணமகன்
    X

    மத்தியப்பிரதேசத்தில் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் தராததால் துப்பாக்கியால் சுட்ட மணமகன்

    மத்தியப்பிரதேசத்தில் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் தராததால் மணமேடையில் மணமகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Dowry

    குவாலியர்:

    மத்தியப்பிரதேச மாநிலம் குலாலியரை சேர்ந்தவர் சுமித் சிவ்ஹாரே. ராணுவ வீரர். இவருக்கும் குவாலியர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக சுமித் சிவ்ஹாரேவுக்கு ரூ.11 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    இருவரின் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது மணமகன் சுமித்சிவ்ஹாரே திடீரென்று புல்லட் மோட்டார் சைக்கிள் மற்றும் ஏ.சி. வாங்க ரூ.2 லட்சம் கூடுதலாக வரதட்சணை தர வேண்டும் என்று கூறினார். ஆனால் மணமகள் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை தர மறுத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுமித் சிவ்ஹாரே தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். மேலும் மணமகளையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தினார்.

    மணமேடையில் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் மணமகன் சுமித்சிவ்ஹாரேயிடம் விசாரணை நடத்தினர். #Dowry

    Next Story
    ×