search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமியை கடத்தி கற்பழித்த 6 பேர் கும்பல்- ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை
    X

    சிறுமியை கடத்தி கற்பழித்த 6 பேர் கும்பல்- ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை

    கேரளாவில் 6 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்தி கற்பழித்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள சினிமா தியேட்டரில் வைத்து சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அந்த சிறுமியின் தாயாரும் கைதானார்.

    மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற வந்த வெளிநாட்டு பெண் ஒருவரும் போதை மருந்து கும்பலால் கடத்தி கற்பழித்து கொல்லப்பட்டார். அவரது சகோதரியின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    பெண்கள் விடுதிக்குள் புகுந்து தனியார் கம்பெனி பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை அந்த பெண்ணே துணிச்சலாக செயல்பட்டு கத்தியால் குத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதுபோன்று தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர் கதையாக உள்ளது.

    இந்த நிலையில் சிறுமி ஒருவர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி திடீரென்று மாயமானார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியை தேடி வந்தனர்.

    இதற்கிடையில் கொல்லம் அருகே தென்மலா-புளியரா போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் இருந்து அந்த சிறுமி மீட்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அந்த சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்ததாக அவர், போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து அந்த சிறுமியை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அந்த சிறுமி கூறிய அடையாளத்தை வைத்து அவரை கற்பழித்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 6 பேர் கும்பலால் சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
    Next Story
    ×