search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
    X

    கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

    கதுவாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குறித்த விவரங்களை வெளியிட்ட கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உட்பட அனைத்து சமூக ஊடகங்களுக்கும் டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #delhihighcourt #kathuacase
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்கள், குடும்ப விவரங்களை வெளியிடக்கூடாது என அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்களிடம் டெல்லி ஐகோர்ட் கேட்டுக்கொண்டது. ஆனால் கதுவா கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.

    இதைத்தொடர்ந்து, டெல்லி ஐகோர்ட் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், கூகுள் மற்றும் மற்ற சமூக ஊடகங்கள் இது போன்ற தகவல்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் நாட்டிற்கு கேடுவிளைவிக்கின்றனர். இந்தியாவிற்கு என்று தனிப்பெருமை உள்ளது.

    சிறுமியின் புகைப்படங்களை வெளியிட்டது அவள் குடும்பம் மற்றும் நாட்டிற்கு செய்யும் அநியாயமாகும். இதற்கு அனுமதி கிடையாது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தது.

    இதற்குமுன் கதுவா சிறுமி குறித்து விவரங்களை வெளியிட்ட பத்திரிக்கை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #delhihighcourt #kathuacase

    Next Story
    ×