search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை
    X

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை

    பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்று வாக்கெடுப்பு நடைபெறும் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சித்தராமையா சில ஆலோசனைகளை வழங்கினார்.
    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரியாக ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். மேலும் சபாநாயகர் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர்கள் சென்றார்கள்.

    பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் சபாநாயகர் தேர்தல் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சித்தராமையா மற்றும் மூத்த தலைவர்கள் சில ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று சித்தராமையாவிடம் கேட்டு கொண்டதாக தெரிகிறது. அப்போது மந்திரி பதவியை யார்? யாருக்கு வழங்க வேண்டும் என்பதை கட்சி மேலிட தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள், மந்திரி பதவி கிடைக்காதவர்கள் ஆதங்கப்பட வேண்டாம், அவர்களுக்கு கட்சி உரிய பதவியை தகுந்த நேரத்தில் வழங்கும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சித்தராமையா சொன்னதாக தகவல்கள் கூறுகின்றன.

    இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் சபாநாயகர் தேர்தல் முடிந்ததும் ஓட்டல்களில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர். 
    Next Story
    ×