search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நிபா காய்ச்சல் எதிரொலி - கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதி ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    நிபா காய்ச்சல் எதிரொலி - கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதி ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    கேரளாவில் நிபா காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் திறக்கும் தேதியை ஜூன் 12ம் தேதி வரை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. #NipahVirus
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. 

    இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மற்றும் கூடுதல் சுகாதாரத்துறை செயளாளர் ராஜீவ் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் திறப்பதை ஜூன் 12-ம் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அம்மாநில பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய பணியாளர் தேர்வுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிபா காய்ச்சல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் தேதியை ஒத்திவைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.#NipahVirus
    Next Story
    ×