search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் முடிவு செய்துவிட்டால் ராகுல்காந்தி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது - தேஜஸ்வி யாதவ்
    X

    மக்கள் முடிவு செய்துவிட்டால் ராகுல்காந்தி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது - தேஜஸ்வி யாதவ்

    பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டால் யாராலும் தடுக்க முடியாது என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். #rahulgandhi #tejashwiyadav
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை பெற்ற நிலையில், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் அந்த கட்சி சமீபத்தில் நடைபெற்ற 2 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தேஸ்ஷ்வி யாதவ் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க.வுக்கு கடும் போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய தேஜஸ்வி யாதவ், 4 வருட பா.ஜ.க ஆட்சி பொய்களாலும் தந்திர மந்திரங்களினால் ஆனது என அனைவரும் தற்போது புரிந்து கொண்டுவிட்டதால் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க பின்னடவை சந்தித்துள்ளது. எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் வேண்டாம் மாறாக அம்பேத்கரின் அரசியலமைப்பே வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், ஜாதி மத ரீதியிலான பிரிவினையினை மக்களிடம் பா.ஜ.க பரப்புகிறது. எனவேதான் பா.ஜ.க.வை ஒழிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது என்றும், பாராளுமன்ற தேர்தலுக்கான இடங்களை பிரித்துக் கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும், அனைத்து கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர புரிதலுடன் செயல்படுகின்றனர் எனவும் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

    கைரானா இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை ஒருங்கிணைந்தது ஒரு நல்ல அறிகுறியாகும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் ராகுல்காந்தி பிரதமர் ஆவேன் என கூறியது குறித்த கேள்விக்கு பதலளித்த தேஜஸ்வி, நிச்சயமாக யார் பெரும்பான்மையுடன் வெற்றி பெருகிறார்களோ அவர்கள் தான் பிரதமர் ஆவார்கள் என்றும், ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டால் யாராலும் அதனை தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

    மேலும், முன்பை விட ராகுல்காந்தி நன்கு முன்னேறியுள்ளதாகவும், அவர் இன்னும் அனுபவங்களை கற்க வேண்டும் எனவும் கூறிய தேஜஸ்வி யாதவ், இப்போது ராகுல் எங்கு போனாலும் அங்கு அமித் ஷாவும் மோடியும் வந்து எதிர் பிரசாரம் செய்கிறார்கள், ராகுலை கண்டு அவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். #rahulgandhi #tejashwiyadav
    Next Story
    ×